ஆசிய சந்தைகளில் இன்று திங்கள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,900 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க மத்திய அரசின் வரவுசெலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமையால் அமெரிக்க மத்திய அரசு முடங்கி உள்ளமையே இந்த விலை உயர்வுக்கு பிரதான காரணம்.
அமெரிக்க டாலர் மீதான நம்பகத்தன்மை குறைய நாடுகளும், செல்வந்தர்களும் தமது சேமிப்பை பாதுகாக்க அமெரிக்க டாலரை கைவிட்டு தங்கத்தை பெருமளவில் கொள்வனவு செய்கின்றனர்.
இன்றைய தங்க விலையே 1860ம் ஆண்டு முதலான வரலாற்றில் மிக அதிக விலையாகும். 1980ம் ஆண்டு ஜனவரி மாதம் தங்கத்தின் விலை $850 அக்கால டாலர் ஆக இருந்திருந்தாலும் அதன் இன்றைய டாலர் பெறுமதி $3,300 மட்டுமே.
அமெரிக்க மற்றும் உலக முறுகல் நிலைகள் தொடர்ந்தால் தங்கத்தின் விலை விரைவில் $4,000 க்கும் அதிகம் ஆகலாம் என்கிறது HSBC வங்கி.
இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 50% ஆல் அதிகரித்து உள்ளது.