இந்த மாத இறுதிக்குள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமான சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மேற்படி சேவைகள் பின் இந்திய-சீன எல்லையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக தொடர்ந்தும் முடங்கி இருந்தன.
ரம்ப் தனது இரண்டாம் ஆட்சியில் இந்தியாவை பல முனைகளில் தண்டித்ததால் விசனம் கொண்ட மோதி அரசு சீனாவுடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வருகிறது.
சீனா தரப்பில் China Eastern விமான சேவையும், இந்தியா தரப்பில் IndiGo விமான சேவையும் முதலில் நேரடி சேவைகளை ஆரம்பிக்கும்.
IndiGo சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் இடைநிறுத்திய சீனாவுக்கான தனது நேரடி சேவைகளை அக்டோபர் 26ம் திகதி ஆரம்பிக்க விண்ணப்பித்து உள்ளது.