ரம்பின் 20-Point காசா யுத்த நிறுத்த திட்டம் நடைமுறையில்?

ரம்பின் 20-Point காசா யுத்த நிறுத்த திட்டம் நடைமுறையில்?

இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டதால் காசா யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு ரம்ப் அறிவித்த 20-point திட்டம் நடைமுறைக்கு வரலாம் என்று அறியப்படுகிறது.

ரம்ப் இந்த திட்டத்தை தனது திட்டம் என்று பெருமை கொண்டாலும் இந்த 20-point திட்டம் முன்னைய சனாதிபதி பைடென் ஜனவரி மாதம் நடைமுறை செய்து பின் ரம்பின் ஆதரவுடன் இஸ்ரேலால் முறுத்துக்கொள்ளப்பட்ட திட்டத்தின் பாகங்களை கொண்டது.

இந்த 20-point திட்டம் காசாவுக்கு மட்டுமே. இது West Bank பகுதிக்கோ அல்லது மொத்த பலஸ்தீனருக்கோ அல்ல. 

மூன்றாம் point க்கு அமைய திட்டம் நடைமுறைக்கு வந்து 24 மணித்தியாலத்துள் இஸ்ரேல் தனது படைகளை Yellow-line பகுதிக்கு வெளியே வெளியே இழுக்கும். தற்போது காசாவின் 80% பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் படைகள் Yellow-line க்கு அப்பால் சென்றாலும் தொடர்ந்தும் 58% காசாவை ஆக்கிரமித்து இருக்கும். அதற்கு பின் எப்போது இஸ்ரேல் படைகள் பின்வாங்கும் என்று தெளிவாக கூறப்படவில்லை.

நாலாம் point க்கு அமைய 72 மணித்தியாலத்துள் அணைத்து கைதிகளையும் (உயிருடன் உள்ள மற்றும் மரணித்த) ஹமாஸ் விடுதலை செய்யும்.

ஐந்தாம் point க்கு அமைய இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனை கைதிகளையும், 1,700 தடுப்பில் உள்ள பலஸ்தீனரயும் விடுதலை செய்யும்.

ஏழாம் point க்கு அமைய முழு அளவிலான உணவு, மருந்து, நீர், மின்சாரம் காசாவுக்கு வழங்கப்படும்.

காசா மக்கள் காசாவை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்படார் என்கிறது 12ம் point 

மிகுதி points எல்லாம் தெளிவாக கூறப்படாதவை.