Microsoft நிறுவனம் தனது Windows 10 என்ற operating system (OS) க்கு வழங்கி வந்த updates உதவிகளை அக்டோபர் 14 திகதியுடன் முடிவுக்கு கொண்டு வருகிறது. அதனால் அக்டோபர் 14ம் திகதிக்கு பின் Windows 10 security updates உட்பட எந்தவொரு உதவியையும் பெற முடியாது.
அதேவேளை Windows 10 OS கொண்டோர் இலவசமாக Windows 11 குக்கு update செய்ய Microsoft நிறுவனம் வசதி செய்கிறது. ஆனால் Windows 11 க்கு தேவையான மிக குறைந்த hardware ஐ கொண்டுள்ள Windows 10 கணனிகள் மட்டுமே Windows 11 க்கு update செய்ய முடியும். ஏனையோர் புதிய கணனி கொள்வனவு செய்தல் வேண்டும்.
அக்டோபர் 14க்கு பின்னும் Windows 10 OS ஐயா பயன்படுத்துவோர் virus, attack களின் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.
மேலும் 1 ஆண்டுக்கு Windows 10 உதவிகளை பெற விரும்புவோர் Microsoft உடன் தொடர்புகொண்டு அக்டோபர் 2026 தமது Windows 10 கணனியின் பாதுகாப்பான ஆயுளை நீடிக்கலாம்.
உலகில் சுமார் 1.4 கணனிகள் Microsoft OS ஐ கொண்டுள்ளன. அதில் 43% Windows 10 ஐ கொண்டுள்ளன. சிலர் தற்போதும் அதற்கு முன் வந்த Windows 7 ஐ பயன்படுத்துகின்றனர்.
Online banking, stock trading, bitcoin trading போன்ற பிரதான வேலைகளை தமது கணனி மூலம் செய்யாதோர், அதாவது இழப்பதற்கு எதுவும் இல்லாதோர், தொடர்ந்தும் Windows 10 ஐ பயன்படுத்துவர்.