மடகாஸ்கரில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு?

மடகாஸ்கரில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு?

இந்து சமுத்திரத்தின் மேற்கே, ஆப்பிரிக்கா கண்ட பக்கம் உள்ள நாடான மடகாஸ்கரில் (Madagascar) இராணுவ ஆட்சி கவிழ்ப்பு நிகழ்வதாக கூறப்படுகிறது.

அந்த நாட்டின் சனாதிபதி Andry Rajoelina, வயது 51, தான் பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக Facebook மூலம் கூறினாலும் அவர் பிரெஞ்சு இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அத்துடன் அவர் செப்டம்பர் 25ம் திகதி முதல் சில இராணுவ அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் தன்னை படுகொலை செய்ய முனைவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

புதன் கிழமைக்கு பின் Rajoelina பொது இடங்களில் காணப்படவில்லை. இவரிடம் பிரெஞ்சு குடியுரிமையும் உண்டு.

இவரை 2009ம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவந்த CAPSAT என்ற பலமான இராணுவ அணி தற்போது இவருக்கு எதிராக திரும்பி உள்ளது. 2009 முதல் 2014 வரை ஆட்சி செய்த இவர் மீண்டும் 2023 இல் ஆட்சிக்கு வந்திருந்தார்.