விரைவில் பாகிஸ்தானிடம் நவீன சீன நீர்மூழ்கிகள் 

விரைவில் பாகிஸ்தானிடம் நவீன சீன நீர்மூழ்கிகள் 

2026ம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா தயாரிக்கும் 2,800 தொன் இடப்பெயர்ச்சி எடை கொண்ட Hangor வகை நவீன நீர்மூழ்கி கப்பல்கள் கிடைக்கவுள்ளன. இந்த நீர்மூழ்கிகள் இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கு அதிகரித்த சவாலாக அமையும்.

பாகிஸ்தான் மொத்தம் 8 சீன நீர்மூழ்கிகளை பெறும். அவற்றில் 4 சீனாவில் தயாரிக்கப்பட்டு பாகிஸ்தான் வருகின்றன. அடுத்த 4 சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் தயாரிக்கப்படும்.

மேற்படி 8 நீர்மூழ்கி கொள்வனவுக்கும் பாகிஸ்தானுக்கு $4 முதல் $5 பில்லியன் வரை  செலவழிக்கும்.

சீனாவிடம் 20 இவ்வகை நீர்மூழ்கிகள் Type 39 என்ற குறியீட்டுடன் சேவையில் உள்ளன.

பாகிஸ்தானிடம் தற்போது 2,050 தொன் இடப்பெயர்ச்சி எடை கொண்ட மூன்று Agosta-90B வகை நீர்மூழ்கிகளும், 1,760 தொன் இடப்பெயர்ச்சி எடை கொண்ட இரண்டு Agosta-70 வகை நீர்மூழ்கிகளுமாக 5 பிரெஞ்சு நாட்டு நீர்மூழ்கிகள் உள்ளன. அவை 1999ம் ஆண்டு முதல் சேவைக்கு வந்த பழைய நீர்மூழ்கிகள்.