அமெரிக்க சனாதிபதி ரம்பின் 20-point காசா திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று வாக்கெடுப்பு மூலம் ஆதரவு வழங்கியுள்ளது. மொத்தம் 15 உறுப்பினரை கொண்ட பாதுகாப்பு சபையில் 13 நாடுகள் ஆதரவாக வாக்களிக்க ரஷ்யாவும், சீனாவும் வாக்களியாது இருந்துள்ளன. இந்த இரண்டு நாடுகளும் தமது வீட்டோ வாக்கு மூலம் திட்டத்தை தடை செய்யவும் இல்லை.
ஹமாஸ் இந்த திட்டத்தை ஏற்க மறுத்துள்ளது. குறிப்பாக மேற்படி ரம்ப் திட்டம் பலஸ்தீனர் நாட்டுக்கு தெளிவான வழியை கொண்டிருக்கவில்லை என்கிறது ஹமாஸ். மேற்படி திட்டம் உருவாக்கவுள்ள International Stabilization Force (ISF) என்ற படைகளுடன் ஹமாஸ் மோதுமா என்பது அறியப்படவில்லை.
ISF படைகளில் அமெரிக்க படைகள் இணையாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்தோனேசியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் படைகள் இணையலாம் என்று கூறப்படுகிறது.
ISF படை 2027ம் ஆண்டு வரை காசாவில் இருக்குமாம். பின்னர் காசா தனி நாடாகுமா, அல்லது மீண்டும் இஸ்ரேல் படைகளின் கைகளுக்கு போகுமா என்பது கூறப்படவில்லை.
இறுதியாக ஐ.நா. ஏற்றுக்கொண்ட திட்டம் “After the (Palestinian Authority) reform program is faithfully carried out and Gaza redevelopment has advanced, the conditions may finally be in place for a credible pathway to Palestinian self-determination and statehood,” என்று மட்டுமே கூறுகிறது.
