Democratic கட்சியை சார்ந்த 6 அரசியல்வாதிகள் நேற்று வியாழக்கிழமை இணைந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த 90 செக்கன்கள் நீள வீடியோவில் அமெரிக்க படையினரை சனாதிபதி ரம்ப் விடும் சட்டவிரோத (unlawful) கட்டளைகளை நடைமுறை செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளனர்.
இந்த வீடியோவால் மூர்க்கம் கொண்ட ரம்ப் மேற்படி 6 உறுப்பினர்களின் செயல் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்வது போன்றது என்றும், இவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடியும் (punishable by DEATH) என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க சட்டத்தில் படைகளின் கட்டளை அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கட்டளைகளை (commands), அவை சட்டங்களுக்கு முரணானவை என்றால் (unlawful), நடைமுறை செய்ய மறுக்க முடியும். அனால் சட்டத்துக்கு உட்பட்ட கட்டளைகளை மீறுவது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
மேற்படி வீடியோவில் கூறப்பட்டவை அமெரிக்க சட்டத்தில் உள்ள உண்மைகளே. வீடியோ அவற்றை நினைவூட்டி உள்ளது.
ரம்பின் கட்டளைக்கு ஏற்ப அமெரிக்க படைகள் மத்திய மற்றும் தென் அமெரிக்க சர்வதேச கடல்களில் போதை கடத்தும் வள்ளங்கள் என்று கூறி பலவற்றை சட்டத்துக்கு அப்பால் அழித்து, குறைந்தது 80 பேரை கொலை செய்தமை ஒரு unlawful செய்கை என்று கூறப்படுகிறது. அமெரிக்க காங்கிரஸ் இந்த தாக்குதல்களுக்கு சட்டப்படி ஆதரவு வழங்கவில்லை.
ஐ.நா. மற்றும் பிரித்தானியா மேற்படி வள்ள தாக்குதல்களை சட்டவிரோத தாக்குதல்கள் என்று கூறியுள்ளன. இந்த தாக்குதல்களை மறுத்த அமெரிக்க படைகளின் கட்டளை அதிகாரி ஒருவர் காலத்துக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுகிறார்.
