தற்போது அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் ஒருமுறை தனது உடல்நல குறைபாட்டை காரணம் காட்டி மாத்தறை நீதிமன்றுக்கு வருவதை தவிர்த்து உள்ளார்.
பசில் மற்றும் அவரின் மனைவியின் சகோதரி Ayoma Galappatti உட்பட 4 பேர் மீது 50 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 1.5 ஏக்கர் நிலம் ஒன்றை மாத்தறை Browns Hill பகுதியில் திருட்டாக பெற்றனர் என்று மாத்தறை நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த விசாணைக்கு செல்வதையே பசில் தவிர்த்து வருகிறார்.
Ayoma வும் நீதிமன்றம் செல்லவில்லை. நால்வரின் ஏனைய இருவருமான Ayoma வின் கணவர் Tissa Galappaththi, Muditha Jayakody ஆகியோர் நீதிமன்றம் சென்று இருந்தனர்.
இம்முறை Left Side Sciatica (கால்களுக்கு செல்லும் நரம்புகளில் ஏற்படும் குறைபாடு) காரணமாக பசில் தான் விமான பயணத்தை செய்ய முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் விமான சேவைகள் இந்த பாதிப்பு உடையோர் விமான பயணம் மேற்கொள்ள தடை இல்லை என்று கூறுகின்றன.
முன்னர் ஒருமுறை தான் விழுந்து கழுத்தில் முறிவு என்று கூறி பசில் நீதிமன்றம் செல்வதை தவிர்த்து இருந்தார். ஆனால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அவரின் X-ray படத்தில் முறிவு எதுவும் இருந்திருக்கவில்லை.
இந்த வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 22ம் திகதிக்கு பின் போடப்பட்டு உள்ளது.
