ஹாங் காங் நகரின் Tai Po பகுதியில் உள்ள Wang Fuk Court என்ற 1,984 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொடர் மாடியை புதன்கிழமை தீ பற்றிக்கொண்டது. இதுவரை தீயணைப்பு படையினர் ஒருவர், வயது 37, உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர்.
தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் இந்த மாடிகளை சுற்றி மூங்கில் கட்டுமான அல்லது திருத்த வேலைகளுக்கு பயன்படும் சாரக்கட்டு கட்டப்பட்டு இருந்தது. அந்த சராகட்டும் தீ வேகமாக பரவ காரணமாகியது.

1983ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தொடர் மாடியில் சராசரி வீடுகளின் அளவு 400 முதல் 500 சதுர அடிகளே.
இந்த தீ ஹாங் காங்கில் கடந்த 17 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய, Level 5, தீயாகும். பிற்பகல் 3:00 மணிக்கு Level 1 ஆக இருந்த தீ, பின் 3:34 மணிக்கு Level 4 ஆக அதிகரித்து, பின் மாலை 6:22 மணிக்கு Level 5 ஆக அதிகரித்து உள்ளது.
தீயணைப்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்கின்றன.
