இரண்டாம் தாக்குதலில் இருந்து நழுவ முனையும் ரம்ப் அணி 

இரண்டாம் தாக்குதலில் இருந்து நழுவ முனையும் ரம்ப் அணி 

அமெரிக்காவுக்கு போதை கடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி செப்டம்பர் 2ம் திகதி முதல் இதுவரை 22 வள்ளங்களை சர்வதேச கடலில் வைத்து குண்டு வீசி தாக்கி அழித்தது அமெரிக்க படைகள். இந்த தாக்குதல்களுக்கு 83 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச கடலில் வைத்து தாக்கியமை சர்வதேச சட்டங்களுக்கு முரண் என்றாலும் எந்த நாடும், தங்களின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு, ரம்புக்கு எதிராக ஐ.நா. செல்லவில்லை.

மேற்படி தாக்குதல்களில் ஒன்றில் தப்பியவர்களை கைது செய்து நீதிமன்றம் எடுக்காது அவர்களின் நாடுகளுக்கு செல்ல அனுமதித்ததையும் சிலர் பிழை என்று கூறினாலும் அதையும் எதிர்த்து ஒன்றும் செய்யவில்லை.

ஆனால் அண்மையில் ஒரு தாக்குதலின் பின் தப்பியவர்களை இரண்டாம் தாக்குதல் மூலம் கொலை செய்தமை செனட்டர் Rand Paul, செனட்டர் Thom Tillis  போன்ற ரம்பின் Republican கட்சி உறுப்பினரையே கண்டிக்க வைத்துள்ளது. தப்பியவர்களை கொலை செய்த இரண்டாம் தாக்குதல் war crime ஆகவே கணிக்கப்படுகிறது. இதை வேறு நாட்டவர் செய்திருந்தால் ICC விசாரணைக்கு வந்திருக்கும்.

இந்த விசயத்தில் ரம்பும், அவரின் பாதுகாப்பு செயலாளர் Hegseth உம் முன்னுக்கு பின் முரணான கூற்றுகளை கூறி தற்போது நழுவ முனைகின்றனர்.

பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடனேயே இரண்டாம் தாக்குதல் செய்யப்பட்டது என்று முன்னர் வெள்ளை மாளிகை கூறியிருந்தது. ஆனால் தற்போது தான் முதல் தாக்குதலை மட்டுமே வீடியோ மூலம் பார்த்ததாகவும், பின் உடனே வேறு ஒரு கூட்டத்துக்கு சென்றுவிட்டதாகவும் கூறுகிறார் Hegseth. அதாவது 2ம் தாக்குதலில் இருந்து நழுவ முனைகிறார் பாதுகாப்பு செயலாளர்.

ரம்பும் தற்போது தனக்கு இரண்டாம் தாக்குதல் தொடர்பாக எதுவும் தெரியாது என்றுள்ளார்.

தற்போது இந்த தாக்குதலை படைகளுக்கு கட்டளையிட்ட அட்மிரல் Mitch Bradley தெளிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.