இந்தியா, நேபாள், பங்களாதேஷ், பூட்டான் ஆகிய 4 நாடுகளில் இருந்து அஸ்ரேலியா செல்வதற்கான மாணவ விசா விண்ணப்பங்களுக்கு அஸ்ரேலியா மேலும் நெருக்கடிகளை திணித்து உள்ளது. இதுவரை Evidence Level 2 வகைக்குள் இருந்த இந்த மாணவரின் விசா விண்ணப்பங்கள் தற்போது Evidence Level 3 வகைக்கு மாற்றப்பட்டு உள்ளன.
Evidence Level 3 வகை மாணவ விசா விண்ணப்பங்கள் அதிகரித்த விசாரணைகளுக்கு உட்படும். இந்த மாணவரின் கல்வி தகைமைகள், பொருளாதார நிலைமை, இவர்களின் உள்நோக்கங்கள் என்பன ஆழமாக ஆராயப்படும்.
அண்மையில் இந்திய மாணவர் சுமார் 100,000 பேர் பொய் கல்வி தகமைகளை கொண்டிருந்தமை அறியப்பட்டு இருந்தது.
வியட்நாம், இந்தோனேசியா ஆகிய இரண்டு நாடுகளின் மாணவ விசா விண்ணப்பங்கள் நெருக்கடி குறைந்த Evidence Level 1 வகையில் உள்ளன. சீனா Evidence Level 2 வகைக்குள் உள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 10 மாத காலத்தில் அஸ்ரேலியாவில் 833,041 விசா மாணவர்கள் இருந்துள்ளனர். அதில் 192,225 பேர் சீன மாணவர்கள், 140,871 பேர் இந்திய மாணவர்கள், 68,456 பேர் நேபாள் மாணவர்கள், 36,415 பேர் வியட்னாம் மாணவர்கள்.
