கடந்த ஆண்டு சீனாவின் மொத்த surplus $1.2 ட்ரில்லியன் 

கடந்த ஆண்டு சீனாவின் மொத்த surplus $1.2 ட்ரில்லியன் 

கடந்த ஆண்டுக்கான (2025) சீனாவின் மொத்த surplus (மொத்த ஏற்றுமதி – மொத்த இறக்குமதி) $1.2 ட்ரில்லியன் (அல்லது $1,200 பில்லியன்) ஆக இருந்துள்ளது. இத்தொகை 2024ம் ஆண்டின் surplus இலும் 20% அதிகம்.

அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீன பொருட்கள் மீது பெரும் இறக்குமதி வரியை திணித்து இருந்தாலும் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கே சீனா அதிக பொருட்களை ஏற்றுமதி செய்து இருந்தாலும் அத்தொகை 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு 19.5% ஆல் குறைந்து உள்ளது.

ஆனால் சீனாவின் ஆபிரிக்காவுக்கான ஏற்றுமதி 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.5% ஆலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி 14% ஆலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 9% ஆலும், தென் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி 8% ஆலும் அதிகரித்துஉள்ளன.

2023ம் ஆண்டில் அதிக surplus ஐ கொண்டிருந்த நாடுகள்:
சீனா – $594 பில்லியன் 
ஜெர்மனி – $250 பில்லியன் 
அயர்லாந்து – $169 பில்லியன் 
சிங்கப்பூர் – $155 பில்லியன் 
சவுதி – $127 பில்லியன் 
சுவிற்சலாந்து – $125 பில்லியன் 
ரஷ்யா – $122 பில்லியன்