மீண்டும் சந்திரனை வலம் வரவுள்ள 4 விண்வெளி வீரர் 

மீண்டும் சந்திரனை வலம் வரவுள்ள 4 விண்வெளி வீரர் 

1972ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவின் விண்கலம் ஒன்று மீண்டும் சந்திரனை 4 விண்வெளி வீரர்களுடன் வலம் வர உள்ளது. பெப்ரவரி மாதம் 6ம் திகதி (2026-02-06) இந்த விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்படும்.

நாசாவின் Space Launch System (SLS) ஏவுகணை மூலம் ஏவப்படும் Orion என்ற இந்த பயணிகளை காவும் கலத்தில் 3 அமெரிக்க வீரர்களும் 1 கனடிய வீரரும் பயணிப்பர். இந்த ஏவுகணை Florida மாநிலத்தில் உள்ள Kennedy Space Center தளத்தில் இருந்து ஏவப்படும்.

 Artemis II என்ற அழைக்கப்படும் இந்த 10 தின பயணத்தின்போது வீரர்கள் சந்திரனை வலம் வருவர் ஆனால் சந்திரனில் தரையிறங்கார். இந்த ஏவல் சந்திரனில் இறங்கும் வசதிகளை கொண்டிராது.

1968ம் ஆண்டு அமெரிக்கா ஏவிய Apollo 8 என்ற பயணமும் வீரர்களை காவி சென்று இருந்தாலும், சந்திரனில் இறங்கவில்லை.