இந்திய, ஐரோப்பிய வர்த்தக உடன்படிக்கை அறிவிப்பு

இந்திய, ஐரோப்பிய வர்த்தக உடன்படிக்கை அறிவிப்பு

இந்தியாவும், 27 நாடுகளின் அங்கம் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் இன்று செவ்வாய் தம்முள் பெரியதொரு வர்த்தக உடன்படிக்கையை அறிவித்துள்ளன. ஆனாலும் இந்த உடன்படிக்கையின் முழு விபரங்களும் உடனடியாக பகிரங்கம் செய்யப்படவில்லை.

இரு தரப்பும் இந்த உடன்படிக்கையை தமது நாடுகளில் சட்டமாக்க மேலும் 6 மாதங்கள் வரை தேவைப்படும். அதனால் இந்த உடன்படிக்கை முற்றாக நடைமுறைக்கு வர மேலும் குறைந்தது ஒரு ஆண்டு தேவைப்படும்.

இந்த உடன்படிக்கை இரசாயன பொருட்கள், இயந்திரங்கள், இலத்திரனியல் பொருட்கள், விமானங்கள் போன்றவற்றின் இறக்குமதி வரிகளை ஏறக்குறைய இல்லாதொழிக்கும்.

ஐரோப்பிய வாகனங்களுக்கு இந்தியா தற்போது அறவிடும் 110% இறக்குமதி வரி முதல் 250,000 வாகனங்களுக்கு 10% ஆக குறைக்கப்படும்.

இந்திய பொருட்களுக்கு ஐரோப்பா அறவிடும் இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் அல்லது முற்றாக விலக்கப்படும். ஆனாலும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் ஐரோப்பிய சட்டங்களுக்கு அமைய தயாரிக்கப்படுவது அவசியம்.

கடந்த ஆண்டு இரு தரப்புக்கும் இடையிலான வர்த்தகம் $136 பில்லியன் ஆக இருந்துள்ளது.

இந்த உடன்படிக்கை இந்தியா மீது அமெரிக்க சனாதிபதி ரம்ப் மூர்க்கம் கொள்ள வைக்கும்.