பிரித்தானிய பிரதமர் சீனா பயணம், நோக்கம் வர்த்தகம் 

பிரித்தானிய பிரதமர் சீனா பயணம், நோக்கம் வர்த்தகம் 

பிரித்தானிய பிரதமர் Keir Starmer புதன்கிழமை சீனா செல்கிறார். பிரித்தானியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் குழப்பத்தில் உள்ள வர்த்தக உறவை புதுப்பிப்பதே பிரித்தானிய பிரதமரின் நோக்கம்.

இந்த அறிவிப்பை சீனாவுக்கான பிரித்தானிய தூதுவர் Peter Wilson செவ்வாய் தெரிவித்து இருந்தார். சீனாவும் பிரித்தானிய பிரதமர் 4 தினங்களுக்கு பெய்ஜிங்கில் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளின் பின் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல் தடவை.

அமெரிக்க சனாதிபதி ரம்பின் தாண்டவத்தால் விசனம் கொண்ட பல நாடுகள் சீனாவுடன் நிதானமான வர்த்தக உறவை வளர்க்க முனைகின்றன. அண்மையில் பிரெஞ்சு சனாதிபதியும் சீனா சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருந்தார்.

லண்டன் நகரில் சீனாவின் மிகப்பெரிய தூதரக கட்டுமானத்தை ஆரம்பிக்க பிரித்தானியா அண்மையில் அனுமதி வழங்கி இருந்தது. அதுவும் பிரித்தானிய பிரதமரின் பயணத்துக்கு உதவியாக இருந்துள்ளது.