Bitcoin என்ற crypto நாணயம் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 18% பெறுமதியை (சுமார் $12,000) இழந்துள்ளது. இன்று மட்டுமன்றி Bitcoin கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாகவே தனது பெறுமதியை இழந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் Bitcoin ஒன்றின் பெறுமதி $126,198 ஆக இருந்தது. இன்று அதன் பெறுமதி $61,000 வரையில் உள்ளது. அது சுமார் 52% வீழ்ச்சி ஆகும்.
கடந்த சுமார் 4 மாதங்களில் Bitcoin நாணயம் இழந்த மொத்த பெறுமதி $1 ட்ரில்லினுக்கும் ($1,000 பில்லியன்) அதிகம். இது ஒரு சாதாரண தொகை அல்ல. ஏனைய crypto நாணயங்களும் கூடவே $700 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளன.
Crypto நாணயம் தங்கத்தை போல் உலக யுத்த காலம் போன்ற ஆபத்தான காலங்களில் சேமிப்புகளை பாதுகாக்க உதவும் ஊடகமாக இருக்கவில்லை என்பது புலனாகிறது.
