கனேடியர், பிரித்தானியர் விசா இன்றி சீனா பயணிக்கலாம் 

கனேடியர், பிரித்தானியர் விசா இன்றி சீனா பயணிக்கலாம் 

கனடிய மற்றும் பிரித்தானிய பிரதமர்கள் அண்மையில் சீனா சென்று சீனாவுடனான உறவை புதுப்பித்ததன் காரணமாக சீனா மேற்படி இரண்டு நாட்டவரும் விசா இன்றி 30 தினங்களுக்கு சீனா பயணிக்க வசதி செய்கிறது.

இந்த மாதம் 17ம் திகதி முதல் கனடிய மற்றும் பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்போர் சீனாவுக்கு 30 தினங்கள் விசா இன்றி பயணிக்க முடியும்.

இந்த வசதி குறைந்தது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அஸ்ரேலியா, ஜப்பான் உட்பட 50 நாட்டவர் விசா இன்றி சீனா பயணிக்கலாம்.