சீனாவின் YJ-12 வகை ஏவுகணைகளின் ஏற்றுமதி வகையான CM-302 ஏவுகணைகளை ஈரான் கொள்வனவு செய்கிறது. உலகின் முதலாவது தரமான கப்பல்களை தாக்கும் இந்த ஏவுகணை சீனாவின் Beidou செய்மதிகளின் உதவியுடன் பயணிப்பவை.
ஒலியிலும் வேகமாக பயணிக்க வல்ல இந்த supersonic cruise missiles சுமார் 290 km தூரம் பாய்ந்து கப்பல்களை தாக்க வல்லன. இவை மிக பதிவாக பயணிப்பதால் இவற்றை எதிரிகள் தடுப்பது (intercept) மிக கடினம்.
இவ்வகை ஏவுகணைகள் ஈரானின் கைகளுக்கு வருவதால் அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஈரானை தாக்கும் திட்டம் மேலும் கடினம் ஆகியுள்ளது.
குறிப்பாக இப்பகுதியில் நிலைகொண்டுள்ள பல பில்லியன் பெறுமதி கொண்ட அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கு இந்த ஏவுகணை எச்சரிக்கை ஆகியுள்ளது. இப்பகுதியில் நிலைகொண்டுள்ள இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களில் மட்டும் 150 யுத்த விமானங்களுடன் 5,000 அமெரிக்க படையினர் உள்ளனர்.
இந்த ஏவுகணைகளை ஈரான் கொள்வனவு செய்யும் முயற்சிகள் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் ரம்பின் ஈரான் மீதான மிரட்டல்கள் காரணமாக கொள்வனவு விரைவு செய்யப்பட்டுள்ளது.
