அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்கள் மீண்டும் இணக்கம் எதுவும் இன்றி முடிந்துள்ளன. அடுத்த பேச்சுக்கள் அடுத்த கிழமை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை ஈரானை மிரட்டும் நோக்கில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் மிக பெருமளவு இராணுவ தளபாடங்களை மத்திய கிழக்கில் குவித்துள்ளார். தற்போது மத்திய கிழக்கில் குவிந்துள்ள ஆயுத, இராணுவ தளபாட தொகை 2003ம் ஆண்டு அமெரிக்காவால் சதாமுக்கு எதிராக குவிக்கப்பட்ட தொகைக்கு நிகராக உள்ளது.
இந்நிலையில் ரம்ப் தன்னை தானே இரண்டு மூலைகளுள் முடக்கி உள்ளார். ஒன்று தனதும், இஸ்ரேலினதும் கைகள் மேலோங்கி இருக்கும் வகையில் இணக்கம் ஒன்றை ஈரானிடம் பெறுவது, அல்லது ஈரானை தாக்கி தனது கை பொம்மை அரசு ஒன்றை அமர்த்துவது.
யுத்தத்தை ஆரம்பித்தால் ஜோர்ஜ் புஷ் சதாமுக்கு எதிராக ஈராக்குள் சென்று அவமானப்பட்டதை வசைபாடிய ரம்ப் தானும் அவ்வகை நிலைக்குள் மாட்டிக்கொள்வார் என்று கணிக்கப்படுகிறது.
சீனாவின் ஆயுதங்கள் ஈரானை அடைந்தால் அமெரிக்கா பெருமளவு அழிவுகளை அடையும். சீனா ஏற்கனவே அமெரிக்க படைகளின் இருப்பிடம் போன்ற உளவுகளை ஈரானுக்கு வழங்கி உள்ளது. அவற்றில் சில பகிரங்கமும் செய்யப்பட்டுள்ளன.
