பலத்த அழிவுகளுடன் 3ம் தினத்தை ஆரம்பிக்கும் ஈரான் யுத்தம்

பலத்த அழிவுகளுடன் 3ம் தினத்தை ஆரம்பிக்கும் ஈரான் யுத்தம்

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பித்த யுத்தம் இரு தரப்பிலும் பலத்த அழிவுகளுடன் 3ம் நாளாக தொடர்கிறது. இந்த யுத்தம் பல கிழமைகளுக்கு தொடரலாம் என்று ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் காரணமாக ஈரானில் 250 பேர் வரை பலியாகியுள்ளனர். அதில் சுமார் 150 பாடசாலை மாணவிகளும் அடங்குவர்.

இஸ்ரேலில் ஈரான் செய்த பதில் தாக்குதல்களுக்கு குறைந்தது 10 பேர் பலியாகியும், 238 பேர் காயமடைந்து உள்ளனர். இஸ்ரேலின் Beit Shemesh நகரத்தில் ஈரானின் ஏவுகணைக்கு 9 பேர் பலியாகி உள்ளனர்.

குவைத்தில் நிலைகொண்டிருந்த 4 அமெரிக்க படையினர் ஞாயிறு ஈரானின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

UAE யில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதன் டுபாய், அபுதாபி நகரங்கள் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்று உள்ளன. இரண்டு நகரங்களின் விமான நிலையங்களும் முடங்கி உள்ளன. UAE யை நோக்கி மட்டும் ஈரான் ஞாயிறு வரை 165 ballistic ஏவுகணைகளையும், 2 cruise ஏவுகணைகளையும், 541 drone களையும் ஏவியுள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளம் ஒன்றை தாக்கிய ஈரான் சார்பு ஆயுத குழு ஒன்றின் 4 உறுப்பினர் பலியாகி உள்ளனர்.

லெபனானின் ஈரான் சார்பு ஹெஸ்புல்லா இயக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலும் சண்டைகள் ஆரம்பமாகி உள்ளன.

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முனைந்த ஆர்பாட்டக்காரர்களில் 22 பேர் பாதுகாப்பு படைகளால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 120 பேர் காயமடைந்துள்ளனர்.

யுத்தம் காரணமாக பரல் எண்ணெய் ஒன்றின் விலை சுமார் 12% ஆல் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு ஊடான விமான போக்குவரத்துக்கு தற்போதைக்கு திரும்பும் நிலையில் இல்லை.