யுத்தம் 4ம் கிழமையில், மேலும் $200 பில்லியன் கேட்கிறார் ரம்ப் 

யுத்தம் 4ம் கிழமையில், மேலும் $200 பில்லியன் கேட்கிறார் ரம்ப் 

அமெரிக்க சனாதிபதி ரம்பும், இஸ்ரேல் பிரதமரும் விரைவாக வெற்றி கொள்ளலாம் என்ற தப்பு கணக்கில் ஆரம்பித்த ஈரான் மீதான யுத்தம் தற்போது 4ம் கிழமைக்குள் நுழைகிறது. இந்நிலையில் ரம்ப் மேலும் $200 பில்லியன் ஈரான் யுத்த நிதியை கேட்கிறார்.

அமெரிக்காவில் யுத்தங்களுக்கு தேவையான நிதியை காங்கிரசே ஒதுக்கீடு செய்யலாம்.

ரம்ப் மேலும் $200 பில்லியனை கேட்பது ஈரான் மீதான யுத்தம் தற்போதைக்கு முடிவுக்கு வராது என்பதை ரம்பும் உணர்ந்து உள்ளமையை காட்டுகிறது. 

அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் யுத்த தொழில்நுட்பங்கள் ஈரான் தலைமைகளை படுகொலை செய்து, அழிவுகளை ஏற்படுத்தினாலும் இவர்களால் ஈரானில் விரும்பியபடி ஒரு பொம்மை அரசை திணிக்க முடியவில்லை.

தற்போது ரம்பின் Republican கட்சி காங்கிரசில் பெரும்பான்மையை கொண்டிருந்தாலும் ஈரான் யுத்தம் தொடர்ந்தால் வரவுள்ள mid-term தேர்தலில் Democrats காங்கிரசில் பெரும்பான்மையை கைப்பற்றலாம். அவ்வாறு நிகழ்ந்தால் அது ரம்பின் தாண்டவத்துக்கு முடிவாகும்.