அமெரிக்காவும், இஸ்ரேலும் தமது அதிநவீன ஆயுதங்கள் மூலம் விரைவில் ஈரானை அழித்து மத்திய கிழக்கில் மிஞ்சி உள்ள ஒரே நாட்டில் தமது கைப்பொம்மை அரசை அமைக்கலாம் என்று கொண்ட கனவு விரைவில் கரைந்து யுத்தம் 5ம் கிழமைக்குள் நுழைகிறது.
முன்னர் 4 கிழமைகளில் யுத்தம் முற்றுப்பெறும் என்று ரம்ப் அரசு கூறியிருந்தது. அது தப்பு கணக்காகி யுத்தம் தொடர்கிறது.
அது மட்டுமன்றி இந்த 5ம் கிழமையில் ஈரானின் கை முன்னரிலும் மேலுங்கி உள்ளது. மறுபுறம் தான் ஆரம்பித்த யுத்தத்தை தன்னால் நிறுத்த முடியாமை கண்டு குமுறுகிறார் ரம்ப்.
யுத்தத்துக்கு முன் தினமும் சுமார் 150 கப்பல்கள் ஹோர்முஸ் நீரினை ஊடு பயணித்துள்ளன. ஆனால் தற்போது ஈரானின் அனுமதி பெற்ற நட்பு நாடுகளின் 5 கப்பல்கள் வரையே தினமும் பயணிக்கின்றன.
அவற்றில் ஒன்று $2 மில்லியன் கட்டணம் கட்டியே அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கட்டணமும் சீன நாணயமான யுவான் செலுத்தப்படுள்ளது. இதை தடுக்க முடியாது விசனம் கொண்டுள்ளார் ரம்ப்.
யுத்தம் ஆரம்பித்து 3ம் கிழமையே கட்டார் தனது LNG எரிவாயு விற்பனையின் $20 பில்லியனை இழந்துள்ளது என்று கூறியுள்ளது. அமெரிக்கா தம்மை பாதுகாக்கும் என்று நம்பிய கட்டார், சவுதி, UAE, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகள் அமெரிக்க பாதுகாப்பு வராமையால் குமுறுகின்றன.
