West Bank பலஸ்தீனருக்கு மரண தண்டனை சட்டம், யூதருக்கு அல்ல

West Bank பலஸ்தீனருக்கு மரண தண்டனை சட்டம், யூதருக்கு அல்ல

பலஸ்தீனர் மீது காழ்ப்பு கொண்ட இனவாதியான இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Ben-Gvir இந்த சட்டத்தின் திங்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்து சட்டமாக்கினார்.

இந்த சட்டப்படி பெரும் குற்றம் செய்யும் West Bank பலஸ்தீனருக்கு automatic மரண தண்டனை வழங்கப்படும். இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் West Bank பலஸ்தீனர் குற்றங்கள் ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் இராணுவ நீதிமன்றால் விசாரணை செய்யப்படும். ஆனால் ஆக்கிரமித்துள்ள இடங்களில் ஐ.நா. விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக குடியேறியுள்ள யூதர்களின் குற்றங்கள் civil நீதிமன்றில் விசாரிக்கப்படும்.

இந்த சட்டத்தை எதிர்த்து Ramallah, Nablus, Hebron போன்ற West Bank நகரங்களில் பலஸ்தீனர் புதன்கிழமை கதவடைப்பு செய்தபோது இஸ்ரேல் இராணுவம் பலவந்தகமாக கடைகளை திறக்க வைத்துள்ளது.

பலஸ்தீனரின் West Bank பகுதியை இஸ்ரேல் 1967ம் ஆண்டு ஆக்கிரமித்து இருந்தது.