அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று வியாழன் தீடீரென இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையில் 10-தின யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
உண்மையில் இந்த யுத்தம் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா என்ற ஈரான் ஆதரவு ஆயுத குழுவுக்கும் இடையிலேயே இடம்பெற்றது. அதனால் யுத்த நிறுத்தமும் இவர்களுக்கு இடையிலேயே. லெபனான் இராணுவம் யுத்தம் செய்யவில்லை.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை முறிய பிரதான காரணங்களில் ஒன்று ஈரானின் வேண்டுகோளுக்கு அமைய லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படாமையே.
வேறு வழியின்றி ரம்ப் தற்போது இஸ்ரேலை கட்டுப்படுத்துவது தெரிகிறது.
இந்த காலத்தில் அமெரிக்காவும் ஈரானும் இரண்டாம் பேச்சு ஒன்றை மீண்டும் பாகிஸ்தானில் நிகழ்த்தக்கூடும்.
