அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான 2-கிழமை யுத்த நிறுத்தம் புதன்கிழமை முடியவுள்ள நிலையில் சனிக்கிழமை மீண்டும் ஹோர்முஸ் மூடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான யுத்த கால இறுதி பேச்சில் ஹோர்முஸ் முழுமையாக திறந்திருக்கும் என்று இரு தரப்பாலும் கூறப்பட்டது.
ஆனால் ரம்ப் வெள்ளிக்கிழமை ஈரான் கப்பல்கள், துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தடைகள் தொடரும் என்று கூறினார். அதன்படி ஈரான் நோக்கி சென்ற கப்பல்கள் அமெரிக்காவால் தடுக்கப்பட்டன.
அமெரிக்காவின் செயல் இணக்கத்தை முறித்துள்ளது என்று கூறிய ஈரான் சனிக்கிழமை மீண்டும் ஹோர்முஸ் பாதையை மீண்டும் மூடியுள்ளது.
ஈரானின் புதிய தடையை மீறி செல்லவிருந்த இரண்டு இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் செய்துள்ளது. இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
