ஈரான் தலைமை தம்முள் பாரிய அளவில் பிளவடைந்து உள்ளதாகவும் அதனால் ஒன்றுபட்ட தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாது உள்ளனர் என்று கூறி தனது பொய்யிலேயே கூதல் காய்ந்துள்ளார் அமெரிக்க சனாதிபதி ரம்ப்.
அதன் காரணமாகவே தான் ஈரான் யுத்த நிறுத்தத்தை கால வரையறை இன்றி நீடித்து உள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் உண்மை ரம்பின் கூற்றுக்கு எதிராகவே உள்ளது. அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல்கள் ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் விரும்பிய ஆட்சி கவிழ்ப்பை நிறைவேற்றாத நிலையில் அமெரிக்கா தனது படைகளை ஈரானில் தரை இறக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. அதற்கு அமெரிக்கா தயார் இல்லை.
அதேவேளை உலக அளவில் விமான எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு தோன்றியுள்ளது. தற்போது விமான எரிபொருள் பரல் ஒன்றுக்கு $200 ஆகவுள்ளது.
இன்றைக்கு யுத்தம் நிறுத்தப்பட்டாலும் புதிய விமான எரிபொருள் சந்தைக்கு வர பல மாதங்கள் தேவைப்படும்.
ஜேர்மனியின் Lufthansa அக்டோபர் வரையான காலத்துக்குரிய 20,000 சேவைகளை (flights) இரத்து செய்துள்ளது. பொதுவாக இவை உள்ளூர் குறுந்தூர சேவைகளே. ஏனைய விமான சேவை நிறுவனங்களும் தமது சேவைகளை குறைக்க தீர்மானித்து உள்ளன.
