மீண்டும் அமெரிக்க பாகிஸ்தான் பயணம் நிறுத்தம்

மீண்டும் அமெரிக்க பாகிஸ்தான் பயணம் நிறுத்தம்

ஈரான் வெளியுறவு அமைச்சர் Araghchi வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் சென்ற நிலையில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் தான் Steve Witkoff, Jared Kushner ஆகிய இருவரையும் பாகிஸ்தான் அனுப்ப உள்ளதாக கூறியிருந்தார்.

ஆனால் ஈரான் தற்போது தாம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை செய்ய திட்டமிடவில்லை என்று அறிவித்து இருந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி ரம்ப் Steve Witkoff, Jared Kushner ஆகிய இருவரின் பாகிஸ்தான் பயணத்தை இறுதி நேரத்தில் இரத்து செய்வதாக கூறியுள்ளார். இது ரம்ப் தரப்பால் இரத்து செய்யப்பட்ட இரண்டாம் பயணமாகும்.

தாம் இரண்டாம் தடவையும் பாகிஸ்தான் பயணத்தை இரத்து செய்தாலும் அது தாம் யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அறிவித்தல் அல்ல என்றும் ரம்ப்  தரப்பு கூறியுள்ளது. அதனால் யுத்த நிறுத்தம் தொடர்கிறது.

ஈரான் துறைமுகங்கள் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கம் செய்யாத நிலையில் தம்மால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க முடியாது என்றும், ஹோர்முஸ் முடக்கத்தை தளர்த்த முடியாது என்றும் ஈரான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் சென்ற ஈரான் வெளியுறவு அமைச்சர் தற்போது ஓமானுக்கும், ரஷ்யாவுக்கும் செல்கிறார்.