Operation Epic Fury யுத்தம் முடிந்தது, யுத்த நிறுத்தம் முடியவில்லை 

Operation Epic Fury யுத்தம் முடிந்தது, யுத்த நிறுத்தம் முடியவில்லை 

அமெரிக்க வெளியுறவு செயலாளர் (Secretary of State) Marco Rubio அமெரிக்கா ஈரான் மீது பெப்ரவரி 28ம் திகதி தொடுத்த Operation Epic Fury என்ற பெயர் கொண்ட யுத்தம் நிறைவு பெற்றுள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளார். “The operation is over” என்றுள்ளார் Marco Rubio.

ஈரானின் அணு வேலைகளை அழிப்பது, அவர்களின் கைகளில் உள்ள யுரேனியத்தை அமெரிக்கா எடுப்பது, ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு செய்வது, பொம்மை அரசை அமைப்பது போன்ற பல கனவுகளுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த மேற்படி யுத்தம் குறிப்பிட்டது எதையும் நிறைவேற்றாது அமெரிக்காவால் கைவிடப்படுகிறது.

மறுபுறம் ரம்பின் பாதுகாப்பு செயலாளர் யுத்த நிறுத்தம் தொடர்வதாக கூறியுள்ளார். முடிந்துபோன யுத்தத்துக்கு என்ன யுத்த நிறுத்தம்.

அமெரிக்காவின் இந்த ஒரு தரப்பு அறிவிப்பால் ஈரான் ஹோர்முஸ் கப்பல் பாதையை திறந்துவிடாது.

விரைவில் ரம்ப் சீனா சென்று சீன சனாதிபதி சீயுடன் உரையாட உள்ளார். அதற்கு முன் தற்போது ஈரான் வெளியுறவு அமைச்சர் சீனா சென்றுள்ளார்.