அமெரிக்க சனாதிபதி ரம்ப் நடைமுறை செய்த குளறுபடியான வரி கொள்கைகளாலும், அரசியல் குழப்பங்களாலும், யுத்தங்களாலும் மக்கள் மந்த பொருளாதாரத்தில் வாழ, சனாதிபதி ரம்ப் மட்டும் 2025ம் ஆண்டு $2.2 பில்லியன் ($2,200 மில்லியன்) வருமானம் பெற்றுள்ளார்.
இந்த $2.2 பில்லியனில் ரம்பின் சனாதிபதி ஊழியம் சுமார் $500,000 (அரை மில்லியன்) மட்டுமே. மிகுதி வருமானத்தை ரம்ப் கேள்விக்குரிய வழிகளிலேயே பெற்றுள்ளார்.
Cryptocurrency வர்த்தகம் மூலம் ரம்ப் $1.4 பில்லியன் பெற்றுள்ளார். $TRUMP என்ற ரம்பின் crypto நாணயம் ஒன்று சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் $40 வரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் பெறுமதி $1.71 ஆக உள்ளது.
ரம்ப நினைவு சினம் கொண்ட Celebration Coin விற்பனை மூலம் ரம்ப் $635 மில்லியன் பெற்றுள்ளார்.
World Liberty Financial என்ற ரம்பின் crypto வர்த்தகம் மூலம் ரம்ப் சுமார் $500 மில்லியன் பெற்றுள்ளார்.
2024ம் ஆண்டில், இரண்டாம் தடவை ஆட்சிக்கு வருமுன், ரம்ப் $622 மில்லியனை மட்டுமே வருமானமாக கொண்டிருந்தார்.
Harry Truman என்ற முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஓய்வு பெற்றபோது இராணுவ சேவையில் இருந்து கிடைத்த $113 மாத வருமானத்துடனேயே வீடு சென்றிருந்தார்.
