சுமார் 20 ஆண்டுகள் பங்களாதேஷை ஆட்சி செய்து பின் 2024ம் ஆண்டில் ஆர்ப்பாட்டகாரர்களால் விரட்டி அடிக்கப்பட இந்தியாவுக்கு தப்பி ஓடிய முன்னாள் பிரதமர் ஹசீனா, வயது 78, தான் டிசம்பர் மாதம் பங்களாதேஷ் சென்று சரண் அடைய உள்ளதாக கூறியுள்ளார்.
தானும் அவரின் Awami League கட்சி உறுப்பினர்களும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம் என்று ஹசீனா கூறியுள்ளார்.
ஹசீனா இந்தியாவுக்கு தப்பிய நிலையில் பங்களாதேஷ் war-crime நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹசினா ஆட்சி காலத்தில் 1,400 கொலை செய்யப்பட்டதாக ஐ.நா. கூறியுள்ளது.
ஹசீனாவை பங்களாதேசுக்கு நாடு திருப்பும்படி புதிய பங்களாதேஷ் அரசு இந்தியாவை கடந்த 2 ஆண்டுகளாக கேட்டு வந்துள்ளது.
