மாஸ்கோ சென்ற அமெரிக்க விமானப்படை விமானம் 

மாஸ்கோ சென்ற அமெரிக்க விமானப்படை விமானம் 

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று செவ்வாய் மாஸ்கோவில் தரையிறங்கி உள்ளது. இதில் யார் பயணித்தார் அல்லது என்ன காவப்பட்டன என்று எந்த தரப்பும் இதுவரை அறிவிக்கவில்லை.

அமெரிக்க விமானப்படையின் 07-7181 என்ற tail number கொண்ட Boeing C-17A  Globemaster III வகை விமானமே Riga என்ற Latvia நாட்டு நகரில் இருந்து 2 மணித்தியாலம் பறந்து மாஸ்கோவில் இறங்கி உள்ளது.

இது மாஸ்கோ நேரப்படி 25ம் திகதி செவ்வாய் காலை 10:00 க்கு சற்று பின்னர் தரையிறங்கி உள்ளது.

இந்த விமானம் 23ம் திகதி அமெரிக்காவில் உள்ள Joint Base Andrews விமானப்படை தளத்தில் இருந்து Riga சென்று இருந்தது.