அமெரிக்கா தயாரித்த, சவுதி வான்படைக்கு சொந்தமான F-15 வகை யுத்த விமானம் ஒன்றை யெமென் நாட்டின் கூத்தி (Houthis) குழு சுட்டு வீழ்த்தியுள்ளது. கூத்தி விழுந்த விமானத்தின் வீடியோ ஒன்றை காட்டி இருந்தாலும் சவுதி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை.
இந்த விமானத்தின் அடையாள இலக்கம் (tail number) 5539 என்றும் வீடியோவில் தெரிகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது ஆரம்பித்த யுத்தம் தற்போது சவுதிக்கும், கூத்திக்கும் இடையேயும் பரவி உள்ளது. கூத்தி ஈரானின் ஆதரவை பெறும் ஆயுத குழு.
கூத்தி கடந்த கிழமை செங்கடலின் தெற்கு நுழை வாசலையும் கைப்பற்றி இருந்தது.
முன்னர் அமெரிக்காவின் F-15 யுத்த விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தி இருந்தது. அதில் ஒரு விமானியை மீட்க அமெரிக்கா சுமார் $500 மில்லியன் இழப்பை சந்தித்திருந்தது.
