ஈரான் மீதான தாக்குதலில் 125 விமானங்கள் பங்கெடுப்பு

ஈரான் மீதான தாக்குதலில் 125 விமானங்கள் பங்கெடுப்பு

ஈரானின் அணு உலைகள் மீது நேற்று அமெரிக்கா செய்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா 125 க்கும் அதிகமான விமானங்களை பயன்படுத்தி உள்ளது. இவற்றில் B-2 Spirit வகை குண்டு வீச்சு விமானங்கள், வானில் எரிபொருள் நிரப்பும் பாரிய விமானங்கள், வேவு பார்க்கும் விமானங்கள், யுத்த விமானங்கள் ஆகியனவும் அடங்கும். முதலில் சில B-2 விமானங்கள் அமெரிக்க Missouri மாநிலத்தில் இருந்து மேற்கே பசுபிக் கடலை நோக்கி பறந்தன. இவை Guam தீவில் உள்ள அமெரிக்க தளத்தை அடைந்தன. ஆனால் […]

ஈரான் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் 

ஈரான் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் 

அமெரிக்கா ஈரானின் Fordow, Natanz, Esfahan ஆகிய 3 அணு உலைகள் மீது சனிக்கிழமை தாக்கியதாக அறிவித்துள்ளது. அத்துடன் தாக்கிய அமெரிக்காவின் விமானங்கள் ஈரானின் வான் பரப்புக்கு அப்பால் சென்றுள்ளன என்றும் ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா தனது B-2 வகை குண்டுவீச்சு விமானங்களை Guam என்ற தீவுக்கு அண்மையில் அனுப்பி இருந்தது. இங்கே அமெரிக்காவின் மிகப்பெரிய தளம் உண்டு. B-2 குண்டு வீச்சு விமானம் 30,000 இறாத்தல் எடை கொண்ட GBU-57 (Guided Bomb Unit) வகை குண்டுகளை வீசக்கூடியது. B-2 […]

ரம்புக்கு Nobel Peace பரிசு, பரிந்துரைப்பது பாகிஸ்தான் 

ரம்புக்கு Nobel Peace பரிசு, பரிந்துரைப்பது பாகிஸ்தான் 

அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு Nobel Peace Prize வழங்குமாறு தாம் பரிந்துரைக்க உள்ளதாக பாகிஸ்தான் இன்று சனிக்கிழமை கூறியுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மூண்ட யுத்தத்தை ரம்ப் விரைந்து தடுத்தமையே காரணம் என்கிறது பாகிஸ்தான். மேற்படி சமாதானத்தின் பின் ரம்ப் தான்  ஒரு அணுவாயுத யுத்தத்தை தவிர்த்து, பல மில்லியன் உயிர்களை காப்பாற்றியதாகவும், ஆனால் அதற்கான credit தனக்கு வழங்கப்படவில்லை என்றும் பல தடவைகள் குறை கூறியிருந்தார். அதேவேளை இந்தியா தான் பாகிஸ்தானுடன் செய்த சமாதானத்தில் […]

Cargolux விமான பாதை தவறு என்கிறது FlightRadar24

Cargolux விமான பாதை தவறு என்கிறது FlightRadar24

கடந்த சில தினங்களாக Cargolux விமான சேவையின் பொருட்களை காவும் விமானங்கள் ஈரான் மீது சென்று மறைந்தது போல காணப்பட்டமைக்கு தமது தவறான estimated கணிப்புகளே காரணம் என்கிறது FlightRadar24. சீனாவில் இருந்து Luxembourg வரை பறந்த CLX9735, CLX9736, CLX9737 போன்ற விமானங்கள் Turkmenistan என்ற நாட்டின் தலைநகர் Ashgabat இல் இறங்கி, எரிபொருள் நிரப்பி, 4 மணித்தியாலங்களின் பின்தமது பயணத்தை தொடர்ந்தனவாம். ஆனால் இந்த விமான பயணங்களின் இரண்டாம் துண்டங்கள் தரவு குளறுபடிகள் காரணமாக […]

சீனாவில் இருந்து ஈரான் பறந்த மர்ம விமானங்கள் 

சீனாவில் இருந்து ஈரான் பறந்த மர்ம விமானங்கள் 

கடந்த வெள்ளி 13ம் திகதி இஸ்ரேல் ஈரானை தாக்கிய பின் பல பொருட்களை காவும் மிகப்பெரிய Boeing 747 வகை cargolux விமானங்கள் 15ம், 16ம், 17ம் திகதிகளில் சீனாவில் இருந்து ஈரான் சென்றுள்ளன. இந்த மர்ம விமானங்கள் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குழம்ப வைத்துள்ளன. Flight CLX 9877 போன்ற cargolux நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து Luxembourg செல்வதாக அடையாளமிட்டு பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும் பின் இவை Kazakhstan, Uzbekistan, […]

யுத்தத்தை வெல்ல ரம்பின் உதவியை நாடும் இஸ்ரேல் 

யுத்தத்தை வெல்ல ரம்பின் உதவியை நாடும் இஸ்ரேல் 

இஸ்ரேல் ஈரான் மீது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த தாக்குதல்கள் சுமார் ஒரு கிழமையாக இரு தரப்பிலும் பாரிய இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் யுத்தத்தை தனது வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் ரம்பின் உதவியை நாடுகிறது. குறிப்பாக மலைகளை குடைந்து நிலத்துக்கு கீழ் ஈரான் அமைத்துள்ள அணுமின் உலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேலால் முடியவில்லை. ஆனால் அமெரிக்காவிடம் உள்ள GBU-57 என்ற 30,000 இறாத்தல் எடை கொண்ட 20 அடி நீள குண்டு சுமார் 200 அடி […]

கனடா, இந்தியா மீண்டும் நல்லுறவில், சீக்கிய கொலை பின்னுக்கு

கனடா, இந்தியா மீண்டும் நல்லுறவில், சீக்கிய கொலை பின்னுக்கு

கனடாவும், இந்தியாவும் மீண்டும் தமது தூதரகங்களை இயக்க செவ்வாய்க்கிழமை இணங்கி உள்ளன. இந்தியா மீது கனடா முரண்பட காரணமாக இருந்த சீக்கிய படுகொலை விசாரணை பின்தள்ளப்பட்டு உள்ளமை தெரிகிறது. இரண்டு நாடுகளும் புதிய தூதர்களை நியமனம் செய்யவும் இணங்கி உள்ளன. கனடியரான Hardeep Singh Nijjar என்ற புஞ்சாப் மாநில பிரிவினை ஆதரவாளியை 2023ம் ஆண்டு கனடாவின் வான்கூவர் நகரில் வைத்து இந்தியா படுகொலை செய்திருந்தது என்ற பாரதூர குற்றச்சாட்டை கனடா கைவிட்டு உள்ளது. ஜூன் 15 முதல் […]

இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்கள் தொடரும் யுத்தம் 

இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்கள் தொடரும் யுத்தம் 

இஸ்ரேல் மிக நீண்ட காலமாக திட்டமிட்டு செய்த ஈரான் மீதான தாக்குதல் இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்களாக தொடர்கின்றது. அதனால் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீண்டும் இஸ்ரேலின் உதவிக்கு வரவேண்டிய நிலை ஏற்படலாம். ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலில் பலியானோர் தொகை 24 ஆக அதிகரித்துள்ளது மட்டுமன்றி ஈரான் தொடர்ந்தும் இஸ்ரேலை தாக்கி வருகிறது. ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்பு முற்றாக தடுக்க முடியாது உள்ளது. ஈரான் தரப்பில் 224 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் இரு தரப்பிலும் சொத்துக்களின், […]

காசா, லெபனான் போன்று இஸ்ரேலிலும் இடியும் கட்டிடங்கள் 

காசா, லெபனான் போன்று இஸ்ரேலிலும் இடியும் கட்டிடங்கள் 

இதுவரை காலமும் இஸ்ரேலின் மேலோங்கிய ஆயுத கையிருப்பு காரணமாக காசா, லெபனான், சிரியா போன்ற இடங்களிலேயே குடியிருப்பு மற்றும் பொது கட்டிடங்கள் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக இடிந்து தரைமட்டம் ஆகின. ஆனால் ஈரானின் பதிலடி தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக இஸ்ரேல் வீடுகளும், கடிதங்களும் முதல் முறையாக தரைமட்டம் ஆகி வருகின்றன. வெள்ளிக்கிழமை ஈரானை இஸ்ரேல் திடீரென தாக்கிய பின் ஈரான் செய்யும் பதிலடி தாக்குதல்கள் இஸ்ரேலோ, மேற்கோ எதிர்பாராத அளவில் இஸ்ரேலில் அழிவுகளை ஏற்படுத்துகின்றன. ஈரான் இஸ்ரேலின் தடுப்பு ஏவுகணைகளுக்கு அகப்படாத புதிய […]

இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி ஏவுகணை தாக்குதல் 

இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி ஏவுகணை தாக்குதல் 

இஸ்ரேல் ஈரான் மீது வெள்ளி செய்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலின் Tel Aviv, Jerusalem போன்ற இடங்களில் பல ஈரானிய ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இஸ்ரேல் மீதான தாக்குதல்களின் முழு சேத விபரம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் கூறியுள்ளார். இஸ்ரேலின் Gush Dan பகுதியில் 34 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னைய சண்டையில் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்காவும் பல மேற்கு நாடுகளும் தமது யுத்த விமானங்கள், ஏவுகணைகள் கொண்டு தடுத்து இருந்தன. […]

1 2 3 359