அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீன சனாதிபதி சீயை வியாழன் பகல் வெள்ளை மாளிகைக்கு அழைத்து ஆடம்பர வரவேற்பு ஒன்றையும் வழங்கி பின்னர் இரவு விருந்துக்கும் சீயை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருந்தார். ஆனால் இணக்கப்பாடு எதையும் இருவரும் இதுவரை அறிவிக்கவில்லை.
இருவரும் மூடிய அறைக்குள் ரம்பின் இறக்குமதி வரிகள், AI, ஈரான், யூக்கிறேன், தாய்வான் போன்ற பிரதான விசயங்களை பேசுவார்கள் என்று கூறப்பட்டாலும் இதுவரை இந்த விசயங்கள் தொடர்பாக அறிவிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை.
ரம்ப் சீக்கு வழங்கிய இரவு விருந்தில் Tesla, Apple, Facebook, OpenAI, NVIDIA போன்ற பல அமெரிக்க AI தொழில்நுட்ப அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சீக்கு ரம்ப் ஒரு bald eagle சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.
