பிரான்சின் பாரிஸ் நகருக்கு வடக்கே உள்ள Saint-Exupery என்ற பாடசாலையில் வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியருக்கு ஆதரவாக ஆரம்பித்த மாணவர் ஆர்ப்பாட்டம் தற்போது மிகப்பெரிய போராட்டம் ஆகியுள்ளது.
இதுவரை சுமார் 6,000 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 100 பாடசாலைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகின.
வகுப்புகளில் அளவுக்கு அதிகமான மாணவர் தொகை, வகுப்புகளில் போதிய வசதிகள் இன்மை, போதிய ஆசிரியர் இன்மை போன்ற பல குறைபாடுகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
2008ம் ஆண்டு இருந்த ஆசிரியர் தொகையிலும் குறைந்த தொகை ஆசிரியர்களே அங்கு தற்போது பணியாற்றுகின்றனர். ஆனால் மாணவர் தொகை 250,000 ஆல் அதிகரித்து உள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த கிழமை பிரான்சின் 10-ஆண்டு அரச bond கடனுக்கான வட்டி 5% ஆக அதிகரித்து இருந்தது. அதனால் அரசு தனது செலவுகளை கட்டுப்படுத்த/குறைக்க முனைகிறது. பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டன.
