உக்கிரம் அடையும் அமெரிக்க-சீன வர்த்தக போர்

US_China

சில கிழமைகளாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் மீண்டும் உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளி அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் ஜூலை 6ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $50 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிகமாக 25% இறக்குமதி வரி அறவிடப்படும் என்று கூறியுள்ளார்.
.
இந்த மேலதிக வரி நடைமுறை செய்யப்படின் தாமும் சமனான தொகையில் மேலதிக வரிகளை அறவுடவுள்ளதாக கூறியுள்ளது சீனா. சீனா பெரும்பாலும் சோயா போன்ற அமெரிக்காவின் விவசாய பொருட்கள் மீதும், இறைச்சி போன்ற பண்ணை பொருட்கள் மீதும் மேலதிக வரியை நடைமுறை செய்யலாம் என்று கருதப்படுகிறது. இப்பொருட்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் ரம்ப் ஆதரவு பிரதேசங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
.
சீனா வருடம் ஒன்றில் சுமார் $2 டிரில்லியன் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதில் சுமார் 20% மட்டுமே அமெரிக்கா செல்கிறது. அதனால் சீனாவின் சுமார் 80% ஏற்றுமதி பாதிப்பு எதையும் அடையாது.
.

உலகின் முதலாவது பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனாவும் வர்த்தக சண்டைக்கு செல்வது உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்று கூறியுள்ளது IMF.
.