பிரசில்ஸ் விமானநிலையத்தில் வைரங்கள் கொள்ளை

பாரிய ஆயுதம் தாங்கி, பொலிசார் போல் நடித்த எட்டு கொள்ளையர் பிரசில்ஸ் (Brussels) விமான நிலையத்தில் புறப்பட தயாராகிக்கொண்டு இருந்த Helvetic Airways என்ற விமானத்த்ல் இருந்து பல மில்லியன் பெறுமதியான வைரங்களை கொள்ளையிட்டுள்ளனர். அதிகாரபூர்வமாக கொள்ளை பெறுமதி அறிவிக்கவில்லை என்றாலும், மொத்த பெறுமதி 350 மில்லியன் வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பொலிசார் போல் இரண்டு வாகங்களில் திங்கள் கிழமை இரவு 8:00 மணியளவில் நுழைந்த எட்டு கொள்ளையர், பணியாளர், பயணிகள் எல்லோரையும் பயமுறுத்திவிட்டு, விமானத்தின் அடிப்பாகத்தில் இருந்து 120 பொதிகளை தெரிந்துதெடுத்தபின் தப்பி உள்ளனர். இந்த வாகனக்களில் ஒன்று பின் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுள்ளது. இவர்கள் வேலியை வெட்டியே நுழைந்துள்ளனர்.

இந்த வைரம் சுவிஸ்சுக்கு எடுத்து செல்லப்பட இருந்தது. Helvetic Airlines ஆனது Swiss Airlines இன் ஒரு பிரிவாகும்.

(படம்: USA Today)