2019 FIFA கேடயத்தை வென்றது அமெரிக்கா

FIFA_2019

2019 ஆம் ஆண்டின் பெண்களுக்கான FIFA (Federation Internationale de Football Association கேடயத்தை வென்றது அமெரிக்கா. நெதர்லாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்று பிரான்சின் Lyon நகரில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 2 goal களையும் , நெதர்லாந்து 0 goal களையும் பெற்றுள்ளன.
.
2019 ஆம் ஆண்டின் வெற்றியும், 2015 ஆம் ஆண்டின் வெற்றியும் அமெரிக்க பெண்கள் FIFA அணிக்கு அடுத்தடுத்தான (back-to-back) வெற்றியை வழங்கி உள்ளது. இன்றைய வெற்றியுடன் அமெரிக்க பெண்கள் அணி மொத்தம் 4 தடவைகள் FIFA கேடயத்தை வென்றுள்ளது.
.
1991, 1999, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் பெண்கள் அணி FIFA கேடயத்தை வென்றுள்ளது.
.
இந்த ஆண்டுக்கான போட்டிகளில் இரண்டாம் இடத்தை நெதர்லாந்தும், மூன்றாம் இடத்தில சுவீடனும் உள்ளன. நான்காம் இடத்தில இங்கிலாந்து உள்ளது.
.