எகிப்தை தண்டிக்கவில்லை என்கிறர் John Kerry

JohnKerryEgypt

ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றிகொண்டு பதவிக்கு வந்த மோர்சி தலைமையிலான அரசை இராணுவ சதியின் மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்த ஜெனரல் அல்-சிஸ்சி (al-Sissi) தலைமையிலான அரசை முன் அறிவித்தல் எதுவும் இன்றி இன்று ஞாயிறு சென்று சந்தித்துள்ளார் அமெரிக்காவின் Secretary of State John Kerry.

சில மாதங்களின் முன் ஒபாமா அரசு மோர்சியின் வெற்றியில் பங்குகொண்டு பிரச்சாரங்கள் செய்திருந்ததை மறந்து இப்போ Kerry எகிப்து சென்று மோர்சியை சிறை வைத்த இராணுவ சதியாளரை சந்தித்துள்ளது. இங்கு Kerry மோர்சி விடயம் சம்பந்தமாக எதையும் கதைக்கவில்லை. அது மட்டுமன்றி சில நாட்களின் முன் அமெரிக்கா சில இராணுவ தளபாட விற்பனையை இரத்து செய்தது எகிப்தின் இராணுவ சதியாளரை “தண்டிப்பதற்காக” அல்ல (is not a punishment) என்றும் கூறியுள்ளார்.

இவர் இதன் பின் இஸ்ரவேல் செல்லவுள்ளார். Kerryயின் வரவுக்கு சில மணித்தியாலங்கள் முன் இஸ்ரவேல் அரசு மேலும் 1700 வீடுகளை பாலஸ்தீனியர்களின் நிலத்தில் கட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் ஒபாமா தனது முதலாவது ஆட்சிக்காலத்தில் 1967 இஸ்ரவேல்/பாலஸ்த்தான் எல்லைகளையே பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படை என் கூறியிருந்தார்.