வியாழன் முதல் உல்லாச பயணிகள், கடுமையான நிபந்தனைகள்

வியாழன் முதல் உல்லாச பயணிகள், கடுமையான நிபந்தனைகள்

வியாழக்கிழமை (2021/01/21) முதல் இலங்கை உல்லாச பயணிகளை இலங்கைக்குள் அனுமதிக்க உள்ளது. ஆனால் இலங்கை வரும் உல்லாச பயணிகள் கடுமையான நிபந்தனைகளை கடைப்பிடித்தல் அவசியம்.

இலங்கை வரும் உல்லாச பயணிகள் (tourist விசா) அரசினால் அனுமதிக்கப்பட்ட 55 விடுதிகளில் ஒன்றிலேயே தங்கியிருந்தால் அவசியம். இக்காலத்தில் இந்த விடுதிகளுக்கு இலங்கையர் அனுமதிக்கப்பட்டார்.

பயணிகள் இலங்கை வருவதற்கு ஆகக்கூடியது 4 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்ட negative Covid-19 PCR பரிசோதனை முடிவுகளை கொண்டிருத்தல் அவசியம்.

ஆகக்கூடியது 7 நாட்கள் வரை இலங்கையில் தங்குவோர் இலங்கை வந்தபின் மேலும் 2 Covid-19 பரிசோதனைகள் செய்யதல் அவசியம். இலங்கையில் 7 நாட்களுக்கும் மேலாக தங்குவோர் 3 பரிசோதனைகள் செய்தல் அவசியம்.

இலங்கை வரும் உல்லாச பயணிகள் $12 பெறுமதியான காப்புறுதி செத்திருத்தல் அவசியம். இந்த காப்புறுதி $50,000 பெறுமதி வரையான வைத்திய சேவைக்கு பயன்படலாம்.

உல்லாச பயணிகளை விடுதி வாக்கங்களே விமான நிலையங்களில் இருந்து எடுத்து செல்லல் அவசியம். பயணிகள் 2 கிழமைகளுக்கு இலங்கைக்குள் சுயமாக பயணிக்க முடியாது. விடுதி வாகனங்களே அவர்களை காவி செல்லல் அவசியம்.

இலங்கை வந்தபின் கரோனா அறிகுறி கொள்வோர் விடுதி அறைகளுக்குள் முடக்கப்படல் அவசியம்.

கடந்த 2 கிழமைகளுக்குள் பிரித்தானிய சென்றோர் தொடர்ந்தும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படார். பிரித்தானியாவில் இருந்து விமானங்களும் இலங்கைக்கும் தற்போதைக்கு அனுமதிக்கப்பட.

தற்போது Srilankan, Qatar Airways, Emirates ஆகிய சில விமான சேவைகள் மட்டுமே சிறிய அளவிலான சேவையை இலங்கைக்கு செய்கின்றன.

இலங்கையில் தற்போது கரோனா தொற்றியோர் தொகை சுமார் 53,000 ஆகவும், மரணித்தோர் தொகை 260 ஆகவும் உள்ளன.