Agnipath: குறைந்த செலவில் புதிய இந்திய இராணுவம்

Agnipath: குறைந்த செலவில் புதிய இந்திய இராணுவம்

இந்தியாவின் மோதி அரசு Agnipath என்ற புதிய திட்டம் மூலம் குறைந்த செலவில் இராணுவத்தினரை உள்வாங்க தீர்மானித்து உள்ளது. இன்று வியாழன் அறிவித்த இந்த திட்டத்தை எதிர்த்து இன்று பீகார் போன்ற இடங்களில் வன்முறைகள் தலைதூக்கி உள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு செலவு உலகத்தில் மூன்றாவது பெரியது. அமெரிக்காவும், சீனாவும் மட்டுமே இந்தியாவிலும் அதிகமான பணத்தை பாதுகாப்புக்கு செலவு செய்கின்றன. இந்தியா ஆண்டுதோறும் செலவு செய்யும் சுமார் $70 பில்லியன் வரிப்பணத்தில் சுமார் அரை பங்கு படைகளின் ஊதியம், ஓய்வூதியம், வசதிகள் ஆகியவற்றுக்கு செலவாகிறது. இவ்வகை செலவுகளை குறைக்க முனைகிறது மோதி அரசு.

Agnipath திட்டம் மூலம் இணைக்கப்படும் படையினர் 4 ஆண்டுகளுக்கு contract மூலமே கடமையாற்றுவர். இவர்களுக்கு ஓய்வூதியம் உட்பட பிற சலுகைகள் கிடையா. இவர்களுக்கு 6 மாத கால பயிற்சியே வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலம் 17.5 வயது முதல் 21 வயது உடையோர் உள்வாங்கப்பட்டாலும் அதில் சுமார் 25% உறுப்பினரே தொடர்ந்தும் இராணுவத்தில் அங்கம் கொள்வர். ஏனையோர் வேறு தொழில் தேடவேண்டும். பெருமளவு ஆயுத பயிற்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு இன்றி அலைவது வன்முறைகள் அதிகரிக்கவும் காரணம் ஆகலாம்.

இந்த திட்டத்தை ஒரு முட்டாள்கள் திட்டம் என்று கூறியுள்ளார் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Sheonan Singh.

நாலு ஆண்டுகளில் ஒருவர் முழுமையான இராணுவ தகமைகளை அடைய முடியாது என்றும், contract படையினரால் முழுநேர இராணுவத்தினரின் வேலைப்பளு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக விமானப்படையினர் முழுமை பெற அதிக காலங்கள் தேவை என்று கூறப்படுகிறது. Contract படையினருக்கு வழங்கப்படும் விமான பயிற்சிகள் 4 ஆண்டுகளின் பின் விரயமாகிவிடும்.