Air France அழியலாம், அமைச்சர் எச்சரிக்கை

AirFrance

பிரான்சின் Air France விமான சேவை விரைவில் இல்லாது அழியக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire. Air France விமான சேவையின் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக ஊதியம் கேட்டு பல தடவைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதே அமைச்சரின் இந்த கூற்றுக்கு காரணம்.
.
அமைச்சர் மட்டுமன்றி பெரும் முதலீடுகளை செய்வோரும் Air France தனது செலவுகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே ஏனைய விமான சேவைகளுடன் போட்டியிட முடியும் என்று கூறுகின்றனர்.
.
இந்த வருட முதல் காலாண்டில் மட்டும் Air France விமான சேவையின் செயல்பாடுகள் $322 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளது.
.
கடந்த வெள்ளிக்கிழமை Air France விமான சேவையின் CEOவும் பதவி விலகி இருந்தார். அவர் அடுத்துவரும் 4 வருடங்களில் Air France ஊழியர்களுக்கு 7% சம்பள அதிகரிப்பை வழங்க முன்வந்திருந்தார். ஆனால் ஊழியர்கள் அதை ஏற்க மறுத்தனர். அதன் பின்னரே CEO பதவி விலகி இருந்தார். ஊழியர்கள் இந்த வருடத்தில் மட்டும் 5.1% சம்பள அதிகரிப்பை கேட்டுள்ளார்கள்.
.
Air France விமான சேவைக்கு தொடர்ந்து பிரென்சு அரசு பணம் வழங்க மாட்டாது என்றுள்ளார் பொருளாதாரா அமைச்சர். ஆகவே ஊழியர்கள் சம்பள கட்டுப்பாட்டை பேணாது விடின், Air France விமான சேவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
.
2004 ஆம் ஆண்டில் ஜேர்மனியின் KLM விமான சேவை பிரான்சின் Air France விமான சேவையுடன் இணைந்து இருந்தது.
.