Android இயக்கத்தில் Blackberry?

BB_Android

ஆரம்பத்தில் Cell phone பாவனை உரையாடலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் Blackberry நிறுவனம் (அப்போது அது RIM என அழைக்கப்பட்டிருந்தது) முதலில் cell phone கள் மூலம் email வாசிக்கும் வசதியை உருவாகியது. பண வசதி படைத்த அதேவேளை பாதுகாப்பும் முக்கியம் என்று கருதிய வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், மேற்கு அரசுகள் போன்றவை Blackberryயை மட்டும் பயன்படுத்த தொடங்கின. இதனால் Blackberry யின் வருமானம் cell phone உலகில் முன்னணியில் இருந்தது. அப்போது Blckberry cell phoneகள் என்ற Blackberry OS (operating system) இனால் இயக்கப்பட்டிருந்தது.
.
பின்னர் வந்த Apple iPhone விரைவில் Blackberry யை பின்தள்ளி விரைவாக வளர்ந்தது. அத்துடன் Google நிறுவனம் Android என்ற OS ஐ அறிமுகப்பட்டுத்த, Android OSஉம் Blackberryயை பின்தள்ளியது. பின்தள்ளப்பட்ட Blackberry QNX என்ற OS ஐ BB10 என்ற பெயரில் பயன்படுத்த ஆரம்பித்தது. அம்முயற்சியும் பெரிதும் பலன் அளிக்கவில்லை.
.

இப்போது Blackberry நிறுவனம் Google நிறுவனத்தின் Android OS ஐ பயன்படுத்த முன்வைத்துள்ளது. அதனால் விரைவில் நீங்கள் Android மூலம் இயங்கும் Blackberry smart phone களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். Blackberry தனது BB10 ஐ முற்றாக கைவிட்டு Androidஐ மட்டும் பயன்படுத்துமா அல்லது இரண்டையும் பயன்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

.