Apple பங்குச்சந்தை பெறுமதி $2 டிரில்லியன்

Apple பங்குச்சந்தை பெறுமதி $2 டிரில்லியன்

iPhone, iPad போன்ற இலத்திரனியல் பொருட்களை தயாரிக்கும் அமெரிக்காவின் Apple நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (stock market capital) இன்று புதன் $2 டிரில்லியனை ($2,000,000,000,000) அடைந்துள்ளது. அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று இந்த பெறுமதியை அடைவது இதுவே முதல் தடவை.

இன்று Apple நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை $467.77 ஆக உயர்ந்து இருந்தது. தற்போது சுமார் 4.355 பில்லியன் Apple பங்குகள் சந்தையில்  உள்ளன.

2018 ஆம் ஆண்டில் Apple நிறுவனத்தின் பங்குசந்தை பெறுமதி $1 டிரில்லியன் ஆக உயர்ந்து இருந்தது. அக்காலத்தில் Apple உலகின் முதல் $1 டிரில்லியன் நிறுவனமாக விளங்கியது.

சவுதியின் Aramco என்ற நிறுவனமே உலகத்தில் $2 டிரில்லியன் பெறுமதியை அடைந்த முதலாவது நிறுவனம். கடந்த ஆண்டின் இறுதியில் Aramco $2 டிரில்லியன் பெறுமதியை அடைந்து இருந்தாலும், தற்போது அதன் பங்குச்சந்தை பெறுமதி சுமார் $1.8 டிரில்லியன் மட்டுமே.

Microsoft நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி $1.6 டிரில்லியன் ஆக உள்ளது. Google/Alphabet நிறுவனத்தின் பெறுமதி $1 டிரில்லியன் ஆக உள்ளது.