Azim Premji U$ 2.3 பில்லியன் நன்கொடை

இந்தியாவின் மூன்றாவது பெரிய செல்வந்தரும், உலககின் 41வது பில்லியனருமான Azim Premji $2.3 பில்லியன் பெறுமதியான தனது முதலீட்டு பங்குகளை கல்வி சார்ந்த பொதுச்சேவை நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொடைக்கு முன்னர், 2012 ஆம் ஆண்டில் இவரின் மொத்த சொத்து சுமார் $12.2 பில்லியன். இந்த நன்கொடையை வழங்குவதற்கு முதல் நாளே இவர் Bill Gate (Microsoft) இன் Giving Pledge கூட்டில் இணைந்திருந்தார்.

Azim Premji இந்தியாவின் புகழ்மிக்க software நிறுவனமான Wipro இன் செயலாளர் ஆவர். நன்கொடைக்கு முன் இவரிடம் 70% Wipro பங்குகள் இருந்தன. அதில் 295.5 மில்லியன் பங்குகளை நன்கொடையாக வழங்கிய பின் இவரின் Wipro உரிமை 58% வரைக்கு குறைந்துள்ளது.

1945 சமையல் எண்ணை சம்பந்தப்பட்ட பொருட்களை (vegetable oil, ghee) தயாரிக்கும் ஒரு நிறுவனமாக Azim இனது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட Wipro (Western India Products) நிறுவனத்தை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய Azim 21 வயதில் நிருவகிக்க தொடங்கினார். உலகில் இலத்திரனியல் தொழில்நுட்பம் வளரத்தொடங்க Wipro வும் இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் முதலிட தொடங்கியது. குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனக்களுக்கு குத்தகை அடிப்படையில் சேவை செய்யத்தொடங்கியது Wipro. அவற்றின்மூலம் பெரும் பணமும் உழைத்தது.