Belarus நாட்டில் ரஷ்யாவின் விமானப்படை தளம்

Belarus

ரஷ்யாவின் மேற்கே உள்ள பேலருஸ் (Belarus) நாட்டில் ரஷ்யாவின் விமானப்படை தளம் ஒன்றை அமைக்கும் பணிகளில் ரஷ்யாவின் தலைவர் பூட்டின் (Putin) ஈடுபட்டு உள்ளார். பேலருஸ் முன்னாளில் USSR இன் ஒரு பாகமாக இருந்திருந்தாலும் தற்போது அது ஒரு நாடு. பூட்டினின் இந்த நகர்வால் விசனம் அடைந்துள்ளது அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள்.
.
ரஷ்யா இவ்வாறு அமைக்கபடும் புதிய விமானப்படை தளத்தில் தனது அதிநவீன SU-27 வகை யுத்த விமானங்களை நிலைகொள்ள விரும்புகிறது. சுமார் 3,530 km வரை சென்று தாக்கக்கூடிய இந்த விமானம் அமெரிக்காவின் F-15 யுத்த விமானங்களுக்கு நிகரானது. பேலருஸில் ஏற்கனவே சிறிய அளவிலான ரஷ்யாவின் ரேடார் (radar) நிலையங்கள் உண்டு. ஆனால் இந்த ரஸ்யாவின் விமானப்படை தள விடயம் சம்பந்தமாக பேலருஸ் அரசு இதுவரை எதுவும் பகிரங்கமாக கூறவில்லை.
.
ரஷ்யா Kyrgyzstan, Armenia போன்ற முன்னாள் USSR அங்க நாடுகளிலும் இவ்வகை விமானப்படை தளங்களை கொண்டுள்ளது.
.
இவ்வாறு ரஷ்யா தனது விமானப்படை தளத்தை பேலருஸில் அமைப்பின் அது ஐரோப்பிய மற்றும் NATO நாடுகளான லட்வியா (Latvia), லித்துவேனியா (Lithuania), போலாந்து (Poland) ஆகிய நாடுகளின் எல்லைகளை ரஷ்யாவின் படைகளை வைக்கும்.
.