Belarus பெறும் ரஷ்யா அணு ஏவுகணை, மேற்குக்கு புதிய தலையிடி

Belarus பெறும் ரஷ்யா அணு ஏவுகணை, மேற்குக்கு புதிய தலையிடி

Belarus என்ற ரஷ்ய சார்பு ஐரோப்பிய நாட்டுக்கு ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் அணுக்குண்டை காவ வல்ல Iskander-M என்ற ரஷ்ய தயாரிப்பு ஏவுகணையை வழங்க தீர்மானித்தது மேற்கு நாடுகளுக்கு மேலும் ஒரு தலையிடி ஆகியுள்ளது.

யூகிரைன், போலந்து, லித்துவேனியா, லத்வியா ஆகிய NATO நாடுகளை எல்லைகளில் கொண்ட Belarus தன்வசம் Iskander-M வகை ஏவுகணையை கொள்வது NATO அணிக்கு பயமுறுத்தலாக இருக்கும்.

அணுக்குண்டுகளை காவ வல்ல இந்த ஏவுகணை சுமார் 500 km தூரம் சென்று தாக்க வல்லது. யூகிரைனுக்கு மேற்கு நாடுகள் பெருமளவு நவீன ஆயுதங்களை வழங்குவதற்கு பூட்டினின் பதிலடியே இது என்று நம்பப்படுகிறது.

அது மட்டுமன்றி Belarus கொண்டுள்ள SU-25 வகை யுத்த விமானங்களையும் அணுக்குண்டு காவும் விமானங்களாக மாற்றி அமைக்க  பூட்டின் இணங்கி உள்ளார்.