1978ம் ஆண்டு அமெரிக்க Vermont மாநிலத்தில் Ben Cohen என்பவரும் Jerry Greenfield என்பவரும் இணைந்து Ben & Jerry’s Ice Cream நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தனர். இவர்களின் ice cream நிறுவனம் சமூக நலன்களில் முன் நிற்பதை பிரதான கொள்கையாக கொண்டது.
2000ம் ஆண்டு பிரித்தானியாவின் Unilever நிறுவனம் Ben & Jerry’s Ice Cream நிறுவனத்தை கொள்வனவு செய்தது. ஆனாலும் Ben, Jerry ஆகிய இருவரும் தொடர்ந்தும் Brand Ambassadors ஆக இயங்கினர். Unilever ஏற்கனவே Magnum என்ற ice cream நிறுவனத்தின் உரிமையை கொண்டிருந்தது.
2021ம் ஆண்டு சமூக நலனில் அக்கறை கொண்ட Ben & Jerry’s இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள West Bank பகுதிகளில் விற்பனையை நிறுத்தியது. ஆனால் இஸ்ரேலை ஆதரிக்கும் Unilever இச்செயலை விரும்பவில்லை. அதனால் Ben க்கும் Unilever க்கும் இடையில் முரண்பாடுகள் உக்கிரம் அடைந்தன.
கடந்த கிழமை Ben & Jerry’s நிறுவனத்தை Magnum பிரிவில் இருந்து பிரிக்குமாறு Jerry கேட்டிருந்தார். ஆனால் Unilever அதற்கு மறுத்துவிட்டது.
அதனால் Ben & Jerry’s நிறுவதில் இருந்து Jerry வெளியேறியுள்ளார்.