Blair: மேற்கின் அரசியல், பொருளாதார ஆளுமை சீனாவிடம் செல்கிறது

Blair: மேற்கின் அரசியல், பொருளாதார ஆளுமை சீனாவிடம் செல்கிறது

இதுவரை காலமும் மேற்கின் கைகளில் இருந்த உலக அரசியல் மற்றும் பொருளாதார ஆளுமை தற்போது சீனாவின் கைகளுக்கு நகர்வதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் Tony Blair கூறியுள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவு, சோவியத் யூனியனின் வீழ்ச்சி போன்றவற்றுக்கு நிகரான நிகழ்வு மேற்கின் வீழ்ச்சி என்றும் சனிக்கிழமை அவர் கூறியுள்ளார்.

“We are coming to the end of Western political and economic dominance” என்று கூறியுள்ளார் Blair. லண்டன் நகருக்கு மேற்கே உள்ள Ditchley Park என்ற இடத்தில் இடம்பெற்ற ஆய்வு அமர்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகின் அடுத்த பெரிய geopolitical மாற்றம் ரஷ்யாவில் இருந்து அல்ல, பதிலுக்கு சீனாவில் இருந்தே வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனா வல்லரசாக வளர்வது இயற்கையானது (natural) என்றும் நியாயமானது (justified) என்றும் கூறிய அவர் சீனா சோவியத் யூனியன் போன்றது அல்ல என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் இராணுவ வலிமையில் சீனா மேலோங்குவதை மேற்கு நாடுகள் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். அதற்கு ஏற்ப மேற்கு நாடுகள் பாதுகாப்புக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Blair 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்தவர்.